ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆக வி.சசிமோகன் நியமனம்

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆக வி.சசிமோகன் நியமனம்
X
ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக வி.சசிமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பி.தங்கதுரை, கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். ஒரு ஆண்டு முடிந்த நிலையில் அவரை மதுரை சிட்டி சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டு, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. பி. தங்கதுரிஅக்கு பதிலாக ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஐ.பி.எஸ். அதிகாரி வி.சசிமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த அறிவிப்பினை, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார். புதியதாக பொறுபேற்க உள்ள போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்து, தற்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சென்னை கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளை வகித்து உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது, தொலைதூரத்தில் உள்ள மலைக்கிராம மக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக தனிசெயலி (ஆப்) புகார் முறையை அறிவித்து மக்கள் மத்தியில் நல்லப்பெயரை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!