மாநகராட்சி தண்ணீர் வாகனம் சிறை பிடிப்பு

மாநகராட்சி தண்ணீர் வாகனம் சிறை பிடிப்பு
X
சீராக குடிநீர் வினியோகம் வழங்கக்கோரி மாநகராட்சி வாகனத்தை சிறை பிடித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது

ஈரோடு மாநகராட்சி 54வது வார்டுக்கு உட்பட்ட குந்தவை வீதி, சீதாகாதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வீடுகளுக்கு குடிநீர் பைப் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 3 மாதமாக தண்ணீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஒரு சில வீடுகளுக்கு தண்ணீர் வந்தால், ஒரு சில வீடுகளுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் இந்த பகுதி மக்களுக்கு தினமும் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக இந்த தண்ணீரும் சரியாக வரவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.இந்நிலையில் மாநகராட்சி சார்பில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்காக வாகனம் வந்தது. இந்த வாகனத்தை 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் பகுதியில் மீண்டும் குழாய் மூலம் சீரான முறையில் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!