தேர்தல் எதிரொலி : பேங்க் பணம் ரூ.2 கோடி பறிமுதல்

தேர்தல் எதிரொலி :  பேங்க்  பணம் ரூ.2 கோடி பறிமுதல்
X
ஈரோட்டில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற வங்கி பணம் ரூ.2கோடி பறிமுதல்

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழு, பச்சியப்பன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து, வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்ப தனியார் ஏஜென்சி வாகனத்தின் மூலம் பணம் எடுத்து வரப்பட்டது. அந்த வாகனத்தை நிலைக்கண்காணிப்பு குழுவினர் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், ரூ.2 கோடியே 5லட்சம் ரொக்கம் இருந்தது.

இதில், ரூ.1 கோடியே 65லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்ததால், மொத்த பணத்தையும் வாகனத்துடன் கைப்பற்றி ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் மீதமுள்ள ரூ.40லட்சத்திற்கும் சேர்த்து உரிய கணக்குகளை காண்பித்ததை தொடர்ந்து வங்கி பணத்தையும், வாகனத்தையும் அதிகாரிகள் விடுவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்