கேரளாவில் தொற்று அதிகரிப்பு எதிரொலி: ஈரோடு ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் தொற்று அதிகரிப்பு எதிரொலி: ஈரோடு ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு
X

ஈரோடு ரயில் நிலையம்.

கேரளாவில் தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஈரோடு ரயில்நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு வழியாக தினமும் 40- க்கும் மேற்பட்ட ரயில்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன.

இதேபோல் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையினர், ரயில்வே போலீசார்,மாநகராட்சி நிர்வாகம் ஆகியோர் சார்பில் ஈரோடு ரயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் முகாமிட்டு தெர்மல் ஸ்கேனர் மூலம் கேரளா ரயில் பயணிகள், வட மாநிலத்தவர்களை சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யும் போது வெப்பம் அதிகமாக இருந்தால் அவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு பாதிப்பு இல்லை என்றால்தான் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல் தாளவாடி எல்லைப் பகுதிகளிலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story