மண்குதிரை போல் உள்ளது திமுகவின் தேர்தல் அறிக்கை : ஜி.கே. வாசன்

மண்குதிரை போல் உள்ளது திமுகவின் தேர்தல் அறிக்கை : ஜி.கே. வாசன்
X
மண்குதிரை வைத்து ஆற்றில் இறங்குவது போல் உள்ளது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூறினார்

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சியின் வேட்பாளரும் தமாக இளைஞரணி மாநில செயலாளருமான யுவராஜாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன் ஈரோடு வந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன் கூறியதாவது:

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக மக்களும் விவசாயிகளும் முழுமையாக நம்புகிறார்கள் என்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்பது மண் குதிரையை வைத்து ஆற்றில் இறங்குவது போல் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை திமுக கொடுத்தது என்று தெரிவித்த அவர் இந்த தேர்தலில் மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணிக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வார்கள் என்றும் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!