ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
X
ஈரோடு மாநகரில், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வீடு வீடாக அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் கடந்த சில நாட்களாக சாக்கடையை சுத்தப்படுத்தும் பணி, கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து, தற்போது டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி 300 வீட்டுக்கு ஒரு கொசு புழு ஒழிப்பு பணியாளர் நியமிக்கப்பட்டு அந்த நபர் ஒரு நாளைக்கு 50-க்கு வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்வார். ஒருநபர், ஒருநாளைக்கு 50 வீடுகள் வீதம், ஒரு வாரத்திற்கு 300 வீடுகளை கண்காணிப்பார்.

இது குறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மாநகர் பகுதியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வீடுவீடாக சென்று, மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஆய்வு செய்வார்கள். இவர்களுடன் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள். முடிந்த அளவுக்கு வீட்டில் தண்ணீர் தேங்கி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிரட்டை, பழைய டயர்கள், உபயோகிக்காத பொருட்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாகும் சூழல் இருக்கும் இடங்களில் மருந்துத் தெளிக்கபப்டும். தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாநகராட்சி அலுவலர்கள், அதிகாரிகள் வார்டு வாரியாக சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!