பாஜக தலைவர்கள் குறித்து இழிவாக பேசிய பாதிரியாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் பாஜக தலைவர்கள் குறித்து இழிவாக பேசிய பாதிரியாரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துவை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்லேறு பாஜக தலைவர்கள் மற்றும் இந்து மதம் குறித்து இழிவாகப் பேசிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக வினர் கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாட்டின் பிரதமர், கட்சியின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில விவசாய பிரிவு தலைவர் நாகராஜன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu