ஈரோடு ஆத்மாவில் தகனம் கட்டணம் குறைப்பு

ஈரோடு ஆத்மாவில் தகனம் கட்டணம் குறைப்பு
X
ஈரோட்டில் அமைந்துள்ள ஆத்மா மின் தகன மயானத்தில், இறப்புகளுக்கு தகனம் செய்யும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு காவிரிக்கரையில், ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மின் மயான அறக்கட்டளை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைந்து நவீன மின் மயானம் 'ஆத்மா'வை பராமரிக்கிறது. இங்கு உடல் தகனம் செய்ய, 3,500 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. இரவில் தகனம் செய்ய கூடுதல் கட்டணமும், கொரோனா உயிர் இழப்புக்கு சிறப்பு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பல்வேறு சூழலில் பண இழப்பு, உயிர் இழப்பு என பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்திப்பதால், மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில், அனைத்து வகையான உயிர் இழப்புக்கும், தகன கட்டணம் 3,500 ரூபாய் மட்டுமே என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா, இரவு நேர தகனம் ஆகியவற்றின் கூடுதல் கட்டணத்தை அறக்கட்டளை, நன்கொடையாளர்கள் மூலம் பெற்று ஈடு செய்ய முடிவு செய்துள்ளதாக, ஆத்மா மயான நிர்வாக இயக்குனர் டாக்டர் மகாதேவன், செயலாளர் தனபால்.ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!