ஈரோடு மாநகராட்சி சார்பில் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு மாநகராட்சி சார்பில் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
X

ஈரோடு மாநகராட்சி சார்பில் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது


ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மாநகராட்சி சார்பில் நடந்தது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட் ஈரோடு வ. உ.சி. பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 50-க்கும் மேற்பட்ட பழ வகை கடைகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான மொத்த வியாபாரிகள், சில்லரை, வியாபாரிகள் பொதுமக்கள் வந்து செல்வார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2 - ம் அலை தாக்கம் காரணமாக தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக வ .உ .சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் வாகனங்கள் மூலமாகவும் தள்ளு வண்டிகள் மூலமாகவும் பொதுமக்கள் இருப்பிடத்திற்கே சென்று விற்பனை செய்யவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொது மக்களுடன் நேரடி தொடர்பில் காய்கறி வியாபாரிகள் உள்ளதால் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று ஈரோடு பஸ் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் நடந்தது. 4 மருத்துவ குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டு வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்