கொரோனா கட்டுப்பாட்டு அறை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2 -ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்) திறக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கொரோனா சிகிச்சை பெற ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதி குறித்தும், தடுப்பூசி குறித்தும், பரிசோதனை குறித்தும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு உட்பட மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்கு 8056931110, 8754731110, 8220671110, 8870361110, 8220791110, 8870541110, 8754231110, 8870581110, 8754381110, 8870691110 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் பொதுமக்கள் நேரம் காலம் பார்க்காமல் கொடுக்கப்பட்டுள்ள 10 தொலைபேசி எண்களில் தங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகராட்சி, கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவு போன் அழைப்புகள் வருகிறது. பெரும்பாலானோர் காய்ச்சல் வந்த நிலையில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை வழங்க மறுப்பதாகவும், சில மருந்துகள் எங்கு கிடைக்கும் என்றும் கேட்டனர். மேலும் சிலர் தடுப்பூசி போடுவது குறித்தும் பரிசோதனை எங்கு மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் கேட்டனர். இன்னும் சிலர் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எந்த மருத்துவமனையில் இருப்பதாகவும் கேட்டறிந்து தெரிந்து கொண்டனர். கிட்டத்தட்ட ஒன்றரை நாள்களில் மட்டும் மருத்துவ ஆலோசனை பெற இந்த கட்டுப்பாடு அறைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போன் அழைப்புகள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu