ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் தீவிர பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் தீவிர பிரசாரம்
X
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, பெரியவலசு நால் ரோடு, கொத்துக்காரர் வீதி, பெரியவலசு, பாங்கிக்காரர் தோட்டம், வள்ளியம்மை வீதி, இந்திரா நகர், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அங்கு வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது:

ஈரோடு மாநகராட்சி பகுதி போல விரிவாக்க பகுதிகளான பெரியவலசு, கொங்கு நகர், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி, குமலன் குட்டை, நசியனூர் சாலை, ஹவுசிங் யூனிட் பகுதியில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும்.

பிரதான வீதிகளில் அரசு, தனியார் பஸ் போக்குவரத்து இருந்தாலும், உட்புற குடியிருப்புகளுக்கு போக்குவரத்து வசதி இல்லை. அப்பகுதிக்கு மினிபஸ் இயக்குவதுடன், புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்.

வரும் காலங்களில் மாநகராட்சி பகுதிக்குள் ஏற்படுத்தப்படும் திட்டப்பணிகளைப்போல, இங்கும் புதிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்க ஏற்பாடு செய்வேன்.

பெருந்துறை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஏற்கனவே திட்டமிடப்பட்டு கிடப்பில் உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியை, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், விரைவாக துவங்கி முடிக்கப்படும்.

வரும் நாட்களில் அந்தந்த பகுதிக்கு குறிப்பிட்ட நாளில் வருகை புரிந்து, மக்களிடம் கோரிக்கை மனுக்கள், புகார்களை பெற்று தீர்வு காண, கை சின்னத்தில் எனக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!