/* */

ஈரோடு காவல்துறை நடத்தும் போட்டிகள்: மாணவ, மாணவிகளே நீங்கள் தயாரா?

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், இளைஞர் தினத்தை முன்னிட்டு, மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு காவல்துறை நடத்தும் போட்டிகள்: மாணவ, மாணவிகளே நீங்கள் தயாரா?
X

வரும் ஜூலை 15-ந் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் வரும், மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகளின் திறனை வெளிப்படுத்த பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டிகள்; 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை (700 வார்த்தைகளுக்கு மிகாமல் ) இருக்க வேண்டும். கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த குறும்படம் (அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை) ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை, ஈரோடு டிஸ்ட்ரிக்ட் போலீஸ்- இவென்ட்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில், இன்று முதல் வரும் 13ம் தேதி காலை 10 மணிக்குள் பதிவிட வேண்டும். ஒவ்வொரு தலைப்புகளில் இருந்தும் சிறந்த முதல் மூன்று மாணவ -மாணவிகளுக்கு, ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Jun 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  2. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  3. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்