கொரானா தடுப்பு நடவடிக்கை இல்லாத கடைகளை மூட கலெக்டர் உத்தரவு...

கொரானா தடுப்பு நடவடிக்கை இல்லாத கடைகளை மூட கலெக்டர் உத்தரவு...
X
கொரானா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத உணவகஙகள் மற்றும் கடைகளை மூட கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்..

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதிய அளவு இல்லாததால் மாவட்டத்தில் அபராதம் விதிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வ.உ.சி பூங்கா,காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில் கலெக்டர் கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரானா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத சில உணவகங்கள் மற்றும் கடைககளை மூட உத்தரவிட்டார். ஒரு உணவுகத்திற்கு 5000 ரூபாய் என 4 உணவகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் கதிரவன், மாவட்டத்தில் முகககவசம் அணியாத பொதுமக்களுக்கும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதனை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி அதிகாரிகள் நடைமுறைப் படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக தொற்றின் எண்ணிக்கை 8ல் இருந்து 20 ஆக அதிகரித்துள்ளதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார். மேலும் கொரோனா தொற்று இரண்டாம் அலை துவங்கி உள்ளதாக கூறப்படுவதால் அது மக்களையும் தேர்தலையும் பாதிக்கக்கடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்,

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!