ஈரோட்டில் ரயில் பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை

ஈரோட்டில் ரயில் பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை
X
வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடுக்கு ரயில் மூலம் வரும் பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாலும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாலும் அச்சமடைந்து பலர் குடும்பங்களுடன் சொந்த மாநிலம் செல்வதற்காக கடந்த சில நாட்களாக ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிமாநிலம் வெளி மாவட்டத்தில் இருந்தும் ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான மக்கள், சிறப்பு ரயில்கள் மூலம் ஈரோடுக்கு வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. உடல் வெப்பநிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், சராசரியாக உடல் வெப்பநிலை இருந்தால் அவர்களை அனுப்பி விடுகிறார்கள். சராசரியை விட கூடுதலாக வெப்ப நிலை இருந்தால் அவர்களை மருத்துவ முகாமுக்கு அனுப்பி விடுகின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!