ஈரோட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து முடிதிருத்துவாேர் கடையடைப்பு பாேராட்டம்

ஈரோட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து முடிதிருத்துவாேர் கடையடைப்பு பாேராட்டம்
X

ஈராேட்டில் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து இன்று ஒரு நாள் சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து  ஈரோட்டில் 1800 சலூன் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து சங்க உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகரில் 350 சலூன் கடைகளும், 1500-க்கும் மேற்பட்ட சலூன் கடை களும் அடைக்கப்பட்டிருந்தன. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு காளைமாடு சிலை அருகே சலூன் கடைகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், நாங்கள் பாரம்பரிய முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 30 லட்சம் தொழிலாளர்கள் இதில் உள்ளனர். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு யுத்திகளைக் கையாண்டு எங்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் குறைந்த சலுகை கட்டணம் அறிவித்து எங்கள் முடிதிருத்தும் தொழிலை முடக்கி வருகின்றனர்.

எங்களுக்கு இந்த தொழில் மட்டும் தான் உள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு தொழில்கள் உள்ளன. எனவே முடிதிருத்தும் தொழிலை தொடங்குவதை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைவிட வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். அந்தவகையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story