வலிமை இந்தியாவிற்கான விழிப்புணர்வு சுதந்திர ஓட்டம்

வலிமை இந்தியாவிற்கான விழிப்புணர்வு சுதந்திர ஓட்டம்
X

வலிமை இந்தியாவிற்கான சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோட்டில் வலிமையான இந்தியாவிற்கான விழிப்புணர்வு சுதந்திர ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய நாட்டின் 75 - வது சுதந்திர தினத்தையொட்டி வலிமை இந்தியாவிற்கான சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சி ஈரோடு வஉசி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக வலிமையான இந்தியா மற்றும் ஆரோக்கியமான இந்தியா என்பதற்கான உறுதிமொழியை ஏற்றனர். இந்த சுதந்திர தின ஓட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதனையடுத்து வஉசி மைதானத்தில் மாணவ மாணவியரின் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!