உலக இளைஞர் திறன் தினம்: ஈரோடு காவல்துறை சார்பில் போட்டிகள்! பரிசுகள்!!

உலக இளைஞர் திறன் தினம்: ஈரோடு காவல்துறை சார்பில் போட்டிகள்! பரிசுகள்!!
X
உலக இளைஞர் திறன் தினம்: ஈரோடு காவல்துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கல்

ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் ஜீலை 15 உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகளின் திறனை வெளிப்படுத்த 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஓவிய போட்டியும், 10 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வியின் முக்கியதுவம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு என்ற தலைப்பில் குறும்படம் போட்டிகள் நடத்தப்படும் என கடந்த 30ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்து.

மேலும் இதில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் உள்ள ஈரோடு டிஸ்ட்ரிக்ட் போலீஸ்- இவென்ட்ஸ் பக்கத்தில் கடந்த 30 தேதி முதல் ஜீலை 13ம் தேதி காலை 10 மணிக்குள் பதிவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்து. இறுதியில் ஒவ்வொரு தலைப்புகளில் இருந்தும் சிறந்த முதல் மூன்று மாணவ -மாணவிகளுக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி ஓவிய போட்டியில் 165 மாணவர்களும், கட்டுரைப்போட்டியில் 124 மாணவர்களும் மற்றும் குறும்பட போட்டியில் 30 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு இன்று ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இ்வ்விழாவில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!