தமிழகத்தில் ஒவ்வொருத்தரின் தலையிலும் 1லட்சம் கடன் : கே.வி தங்கபாலு
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்.வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ராவை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி தங்கபாலு ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது
விவசாயம் உட்பட பல்வேறு துறைகளில் முதலிடத்திலிருந்த இந்தியாவை கடந்த 6 ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாக மாறவிட்ட கொடுமையை பார்க்கின்றோம்.15லட்சம் தருவோம் எனககூறி யாருக்கும் இதுவரை தரவில்லை.
பணமதிப்பிழப்பு காரணமாக சிறுகுறு தொழில்கள் நலிவடைந்ததை பார்த்தோம். ஜி.எஸ்.டி யால் அனைத்து தொழில்களும் முடங்கியதோடு வேலை வாய்ப்புகளையும் அழித்துவிட்டது
மத்திய பிஜேபி அரசு. தற்போது விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்ததை தமிழக முதல்வர் எடப்பாடியர் ஆதரிக்கும் கொடுமையை கண்டு கொண்டிருக்கின்றோம்.
திமுக கலைஞர் ஆட்சியில் 3ம் இடத்தில் இருந்த தமிழகத்தை தற்போது 19ம் இடத்திற்கு தள்ளிவிட்டார் எடப்பாடி அரசு. கல்வி மற்றும் தொழில் வளர்சியில் பின்னோக்கிவிட்டதை இந்நாடு சந்தித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வாழும் ஒவ்வொருத்தரின் தலையிலும் 1லட்சம் கடன் வைத்து தற்போது 5 லட்சம் கோடி ககடானாக தமிழகத்தை மாற்றியது தான் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசின் சாதனை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu