அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு: ஈரோட்டில் அதிமுகவினர் அஞ்சலி

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு:  ஈரோட்டில் அதிமுகவினர் அஞ்சலி
X

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மறைந்த மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுயொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நில குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அவரது படத்திற்கு அதிமுக வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மாவட்ட கட்சி அலுவலகத்தில் மறைந்த மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே. எஸ்.தென்னரசு ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் மதுசூதனின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, தங்கமுத்து, ராமசாமி, ஒன்றிய செயலாளர் பூவேந்திரகுமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், நிர்வாகிகள் மாதையன், சூரம்பட்டி தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!