அதிமுக அரசு ஊழல் கறைபடிந்த அரசாங்கம்: கே.எஸ். அழகிரி பேச்சு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெராவை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி ஈரோடு மரப்பாலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினும் , ராகுல் காந்தியும் விலைவாசியை குறைப்போம் என்று உறுதியளித்து உள்ளதாகவும் , ஸ்டாலின் முதல்வராக வந்தால் மன்மோகன்சிங் பொருளாதார கொள்கையை பின்பற்றி விலைவாசியை குறைப்போம் என்றும் பெட்ரோல் விலை , நிஷிஜி ஐ மாற்றி அமைப்போம் என்றார்.
மேலும் தேர்தல் நேரத்தில் கூட இதுவரை இருந்த பிரதமர்கள் உள்ளூர் அரசியல் பேச மாட்டார்கள் என்றும் வளர்ச்சியை மட்டுமே பேசுவார்கள் என்ற கே.எஸ்.அழகிரி மோடி உள்ளூர் அரசியல் பேசுகிறார் என்றார். உலகத்தில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் இந்திராகாந்தி , சோனியாகாந்தி ஆகிய இரண்டு பெண்களை தலைவராக்கி உள்ளதாகவும் ,
ஆனால் பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவற்றில் எப்போவது பெண்களை தலைவராக்கி உள்ளீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.பிரதமர் மோடி ஓட்டுக்காக தவறாக பேச வேண்டாம் என்ற அழகிரி , மோடி மனைவி. மோடி பெண்களை மதிப்பவர் என்ற சான்றிதழ் தருவாரா ?? என்றார்.
தமிழை காப்பாற்ற , தமிர்களின் பண்பாடுகளை காப்பாற்ற , தமிழர்களின் கலச்சார பெருமையை காப்பாற்ற இது இறுதி யுத்தம் என்றும் இதில் உண்மையான முழுமையான வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
26 லட்சம் பேர் மட்டுமே படிக்கும் சமஸ்கிருத்திற்கு 640 கோடி ரூபாயும் , ஆனால் 8 கோடி பேர் பேசும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு 7 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஓதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்த கே.எஸ்.அழகிரி ,கலச்சார படையெடுப்பை பாஜகவும் ஆர்எஸ்எஸ் ம் நடத்துகிறது என்றும் , இந்தியாவில் ஒரு மொழி பேசும் கொள்கை எடுபடாது என்றார்.
பாஜகவை வேரோடும் , வேரடி மண்ணோடும் அழிக்கவில்லை என்றால் தமிழ் கலாச்சாரம் பாதிக்கப்படும் என்றும் மோடியின் முகமாக , மோடியின் செயல்பாடுகளாக அதிமுக விளங்குகிறது என்றும் அதிமுக அரசு ஊழல் கறைபடிந்த அரசாங்கம் என்ற அழகிரி இந்த போர்களத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu