தமிழ் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்..

தமிழ் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்..
X
இலங்கை அரசின் இனப்படுகொலை உள்ளிட்ட குற்றங்களை பன்னாட்டு விசாரணை குழு மூலம் விசாரிக்க வேண்டும் எனக்கோரி தமிழ் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்..

ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை முன், தமிழ் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பொறுப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில், இலங்கை அரசின் இனப்படுகொலை உள்ளிட்ட குற்றங்களை பன்னாட்டு விசாரணை குழு மூலம் விசாரிக்க வேண்டும். ஈழத்தமிழர்களை சுட்டு கொன்ற இலங்கை அரசு மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈழத்தில் ராணுவ மயம், சிங்கள மயம், பவுத்த மயத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெனீவாவில் தற்போது நடக்கும் ஐ.நா., சபை கூட்டத்தில் மத்திய அரசு வலியுறுத்தவதோடு மத்திய அரசு பிற நாடுகளிடம் அழுத்தம் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. கணேசமூர்த்தி, ரத்தினசாமி, ஜாபர், குமரகுருபரன், சித்திக் உட்பட பல்வேறு அமைப்பை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!