பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயலும் தாய்

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயலும் தாய்
X
-தாய் மீது மனு கொடுக்கும் சிறுவர்கள்.

ஈரோடு ரங்கம்பாளயத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான ராமலிங்கம். இவரது மகன்களான தீபக் ( 15 ) மற்றும் கிஷாந்த் ( 6 ) ஆகிய இருவரும் இன்று தனது தாத்தா மற்றும் பாட்டி உதவியுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையை சந்தித்து புகார் அளித்தனர்.

அதில் தனது தந்தை ராமலிங்கம் இரண்டாவது திருமணம் கொண்டு தனது தாய் ரஞ்சிதா மற்றும் இரண்டாவது மனைவி இந்துமதி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசிந்து வந்ததாகவும், இதனிடையே தனது தாய் ரஞ்சிதா, தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு தங்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.


சிறுவர்களான எங்களை படிக்க விடாமல், வீட்டு வேலைகளை செய்ய வைத்தும், குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளை செய்து முடிக்காவிட்டால் பாத்ரூம் கழுவும் கிருமி நாசினியை குடிக்க வைப்பதும், மிளகாய் பொடி கலந்து சாப்பாட்டை சாப்பிட வைப்பது, பாத்ரூமில் தூங்க வைத்தும், தங்களின் ஆண் உறுப்பின் மீது மிளகாய் பொடி தூவியும் சித்ரவதை செய்வதாகவும், சிறுவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் தாய் ரஞ்சிதாவும், தாய் திருமணம் செய்துள்ள தாயின் தோழி தனலட்சுமியும் "தங்களை நரபலி கொடுக்கப் போவதாக" மிரட்டி வருவதாகவும் காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அச்சிறுவர்கள், தங்களது தாய் ரஞ்சிதா, தோழி தனலட்சுமியை திருமணம் செய்துள்ள ஆதாரத்தையும் வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!