9 , 11ம் வகுப்புகள் எப்போது நடைபெறும், அமைச்சர் பதில்

9 , 11ம் வகுப்புகள் எப்போது நடைபெறும், அமைச்சர் பதில்
X
தமிழ்நாட்டில் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவு செய்வார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் கூடுதல் கட்டிட பணிக்கான பூமிபூஜையில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிப்ரவரி மாதம் முதல் 9 ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவு செய்வார். சில பள்ளிகளில் கொரோனா தாக்கம் உள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறு.

இரண்டு ஆசிரியர்களுக்கு மட்டும் சோதனை எடுத்துள்ளனர். மேலும் ஆசிரியர்களுக்கு ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனோ தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்ட பிறகு அனைத்து துறையை சேர்ந்தவர்களுக்கும் போடப்படும். உடற்கல்வி ஆசிரியர்களை பொறுத்தவரையில் இதுவரை பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டனர் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!