வேலைவாய்ப்பில் 75 % தமிழருக்கு முன்னுரிமை: காங்கிரஸ் வேட்பாளர்

வேலைவாய்ப்பில் 75 % தமிழருக்கு முன்னுரிமை: காங்கிரஸ் வேட்பாளர்
X
வேலைவாய்ப்பில் 75 % தமிழருக்கு முன்னுரிமை காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் வாக்குறுதி

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, கள்ளுக்கடைமேடு, காதர் மைதீன் வீதி, ஈ.வி.என்.சாலை, பொய்யேரிக்கரை, ஜீவானந்தம் வீதி, என்.ஜி.ஜி.ஓ., காலனி பகுதியில் கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். வாக்காளர்களிடம், வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான திட்டங்களை, மக்களின் ஆலோசனையோடு நிறைவேற்றுவேன். அதே நேரம், எங்கள் கூட்டணியின் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் நிறைவேற்றப்படும். காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் குறைப்பு, ஆவின் பால் லிட்டருக்கு கொள்முதல் விலையில், மூன்று ரூபாய் உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்குவதுடன், விற்பனை விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும்.

கல்விக்கடன் தள்ளுபடி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு, 40 சதவீத ஒதுக்கீடு, தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில், 75 சதவீத இடங்கள் தமிழர்களுக்கே என்பதை கட்டாயம் பெற்றுத்தருவோம். இதன் மூலம், படித்த, வேலை இல்லாத இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாகும்.

இவற்றை நிறைவேற்ற எனக்கு கை சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு பேசினார். பின், அண்ணாமலை வீதி, ராஜாஜி வீதி, ஈ.வி.ஆர்., வீதி, காரை வாய்க்கால் சாலை, ஆலமரத்தெரு, முனிசிபல் காலனி, மோகன் தோட்டம் பகுதியில் கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!