ஈரோட்டில் 3ம் நாளாக தொடரும் கனமழை

ஈரோட்டில் 3ம் நாளாக தொடரும் கனமழை
X
ஈரோட்டில் மூன்றாம் நாளாக தொடரும் கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி.

ஈரோடு மாவட்டத்தில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகியது. மேலும் இரவு நேரங்களிலும் புழுக்கம் குறையாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தூங்க முடியலும் சிரமப்பட்டனர். இந்நிலையில் கடந்த இருதினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்து பூமியை குளிரடைய செய்தது. இதனை தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்றும் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

நள்ளிரவு வரை பெய்த மழையின் காரணமாக வெப்ப புழுக்கம் முற்றிலுமாக குறைந்து பூமி குளிர்ச்சியடைந்துள்ளது. மூன்று நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்து வரும் மழையினால் இதுவரை வெப்பத்தால் வாடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!