வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
X

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு ஈரோட்டை அடுத்துள்ள ரங்கம்பாளையம் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கியது.

இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான கதிரவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த பயிற்சி வகுப்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குச்சாவடி நிலை அலுவலர் 1, 2,3 ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேர்தல் அன்று வாக்குப்பதிவு மையத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்