துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
X
துணைநிலை ராணுவத்தினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு குழுக்களாக சென்று தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையிலும், பாதுகாப்பாக நடத்தும் வகையிலும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் சுமூகமான முறையில் நடக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் வாக்களிக்கும் வசதியாக 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்திற்கு 92 துணை இராணுவத்தினர் வருகை தந்துள்ளனர். இவர்கள் தேர்தல் நாளன்று பதற்றமான வாக்குச்சாவடிகள் பணியில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்நிலையில் இந்த துணைநிலை ராணுவத்தினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு குழுக்களாக சென்று தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையிலும் பாதுகாப்பாக நடத்தும் வகையிலும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று பிபி அக்ரஹாரம் பகுதியில் உள்ள கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜீ ஆகியோர் தலைமை தாங்கி கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத் ரவிக்குமார் ஜெயமுருகன் பாலமுருகன் மற்றும் இராணுவத்தினர் கலந்து கொண்டனர். கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு பெரிய அக்ரகாரம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் வரை சென்று பின்னர் மீண்டும் பவானிரோடு வழியாக அசோகபுரம், பார்க் ரோடு, திருநகர் காலனியில் முடிவடைந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!