கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்க வேண்டும்

கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்க வேண்டும்
X
கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் உள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, பாசனசபை செயலாளர் சாமியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வாய்க்கால் கட்டுமானம் சிதிலமடைந்துள்ளதால் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சரியாக செல்லாததால் கடைமடை நிலங்கள் தரிசாக மாறும் அபாயம் உள்ளதால் வாய்க்கால் சிதிலமடைந்துள்ள பகுதிகளில் சிலாப் கற்கள் கொண்டு சீரமைக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் மூலம் லைனிங் செய்யப்படுவதாக தவறான தகவல்களை பரவுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ai solutions for small business