ஈரோடு: பா.ம.க பொதுக்குழு கூட்டம்

ஈரோடு: பா.ம.க பொதுக்குழு கூட்டம்
X
பூத் கமிட்டியை வலுப்படுத்த பா.ம.க சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம்.

ஈரோடு மாநகர பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் தா.ப. பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பொ.வை.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பூத் கமிட்டி வலுப்படுத்த வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டணி குறித்து எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு வெற்றிக்காக பாடுபட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகரச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜ், கருங்கல்பாளையம் ராஜேந்திரன், மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்புச் செயலாளர் முருகன், உழவர் பேரியக்கம் பெருமாள், எலவமலை ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், துணைச் செயலாளர்கள் ரமேஷ் கணேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துகுமார், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வராஜ், தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் முத்துலட்சுமி, அய்யம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மாவட்ட செயலாளர் ராசு நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!