ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
X

ஈரோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73- வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஜெயலலிதா சிலைக்கும், அவரது உருவப்படத்திற்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கட்சி அலுவலகம் மற்றும் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து எம்ஜிஆர், அண்ணா, பெரியார் ஆகியோர் சிலைகளுக்கும் எம்எல்ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவ மூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், ஜெயராஜ், கோவிந்தராஜ், முருகசேகர், தங்கமுத்து, ராமசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் அதிமுக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!