சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்
X
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராடட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் 25 க்கும் குறைவாக உள்ள குழந்தைகளை கொண்ட மையங்களை மூடுவதாக அறிவித்த அறிவிப்பை உடனடியாக அரசு கைவிட வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை கைது செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business