பத்தாம் வகுப்பு தேர்வு எப்போது ? - அமைச்சர் பதில்

பத்தாம் வகுப்பு தேர்வு எப்போது ? -  அமைச்சர் பதில்
X

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் ரூ.2.80 கோடி மதிப்பிலான வட்டார போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா, வ.உ.சி பூங்கா புதுப்பித்தல் பணிகள் மற்றும் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பசுமைக் கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் ,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் , இறுதி முடிவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிப்பார் என்றார். அதிமுக ஆட்சியில் போட்டித்தேர்வுகளுக்கு தேவையான 8000 புத்தகங்கள் அடங்கிய நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!