நிழற்குடை அமைப்பதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு

நிழற்குடை அமைப்பதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு
X

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி சார்பில் நிழற்குடை அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு அளித்துள்ளனர்.

ஈரோடு ஜவுளி சிறு குறு வியாபாரிகள் சங்க தலைவர்கள், நூர்சேட், செல்வராஜ் ஆகியோர் தலைமையில் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-ஈரோடு கனி மார்க்கெட் கடந்த 40 ஆண்டு காலமாக பன்னீர்செல்வம் பார்க் அருகே இயங்கி வருகிறது. பள்ளிபாளையம், நாமக்கல், எடப்பாடி, திண்டுக்கல் ,மதுரை, திருச்செங்கோடு, தர்மபுரி ,சிவகிரி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறு, குறு, ஜவுளி உற்பத்தியாளர்கள் வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி சார்பில் ஐந்து மாடி அடுக்கு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. ஜவுளி வியாபாரிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள மாநகராட்சி தற்காலிக கடைகள் அமைத்து கொடுத்துள்ளனர். ஏற்கனவே கொரோனா காரணமாக ஐந்து மாதங்கள் கடையை நடத்த முடியாமல் இருந்தோம். நகைகளையும் வங்கிகள் மூலம் அடகு வைத்து முதலீடு பெற்று வணிகம் செய்து வந்தோம். இந்நிலையில் ஜவுளி மார்க்கெட் முன்பகுதியில் நிழற்குடை அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இங்கு நிழற்குடை அமைந்தால் தற்காலிகமாக அமைத்துக் கொடுத்த 70 கடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். இதற்கு மாற்று வழியும் மாநகராட்சி செய்யவில்லை. எனவே புதிதாக அமைய உள்ள நிழற்குடை இங்கு அமைக்கப்பட வேண்டாம். அதற்கு பதிலாக வேறு இடங்களில் அமைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு