ஈரோட்டு: மதிமுக தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி

ஈரோட்டு: மதிமுக தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி
X
ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். இதில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் சேர்ந்து 45 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை கழக வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதியாக வைகோவிடம் கட்சி நிர்வாகிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது என்பது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே முடிவெடுத்து விட்டதாக தெரிவித்தார். திராவிட இயக்கத்தை சிதைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் முயல்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கிலும், சுயமரியாதை கொள்கையை நிலை நாட்டுவதற்காகவும் தான் திமுக கூட்டணி என்ற முடிவை எடுத்துள்ளதாக வைகோ குறிப்பிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடியது , நியூட்ரினோவுக்கு எதிராக போராடியது, 7 பேர் விடுதலைக்காக போராடியது என்று குறிப்பிட்ட வைகோ, தமிழ்நாட்டு நலனுக்காகவும், தமிழர்களின் வாழ்வு வளம் பெறுவதற்காகவும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கவே மதிமுக பாடுபடுவதாகவும் தெரிவித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!