ஈரோட்டில் இம்ப்காப்ஸ் நிறுவன திறப்பு விழா
ஈரோட்டில் இம்ப்காப்ஸ் மருந்தகத்தின் 25வது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
ஈரோட்டில் இம்ப்காப்ஸ் எனப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய்நிலையம் மற்றும் பண்டகசாலை மருந்தகத்தின் 25வது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாநில வன ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை வன பாதுகாப்பு அலுவலர் நாகநாதன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனையடுத்து மருந்து ஆலோசனை மையத்தை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஜியாதாஸ் காந்தி திறந்து வைத்தார்.
இது குறித்து மருத்துவர் மற்றும் இம்ப்காப்ஸ் தலைவர் கண்ணன் கூறும்போது,இம்ப்காப்ஸ் கடந்த 1945 ஆம் ஆண்டு துவங்கி 77 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மருந்துகள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் மொத்தம் 25 கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஈரோட்டில் துவக்கப்பட்ட 16வது கிளை ஆகும்.இது மத்திய அரசின் கீழ் உள்ள வேளாண் துறை மாநிலக் கூட்டுறவு நிதியகத்தின் கீழ் செயல்படுகிறது.
இங்கு தரமான மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இங்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படுகின்றது. இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. கொரோனா பரவல் காலத்தில் உட்கொள்ளப்பட்ட கபசுர குடிநீரில் இம்ப்காப்ஸ் பங்களிப்பு மிகப் பெரிய அளவு என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu