ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: கொ.ம.தே.க ஈஸ்வரன்

ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: கொ.ம.தே.க ஈஸ்வரன்
X
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் கொ.ம.தே.க ஈஸ்வரன் வலியுறுத்தல்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழிந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பட்டாசு ஆலைகளில் இதுபோல விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அனைத்து பட்டாசு ஆலைகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!