கொலை வழக்கு, விஜய் மன்ற நிர்வாகி உட்பட 4 பேர் கைது

கொலை வழக்கு, விஜய் மன்ற நிர்வாகி உட்பட 4 பேர் கைது
X

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு அருகே கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது நண்பர் கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த குணசேகரன். 2018 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய கலை , குணா இருவரையும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியில் வைத்து வீச்சரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் வழக்கு தொடர்பாக நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி கார்த்தி, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த வேட்டையன் ரவி, அழகிரி மற்றும் மதன் உள்ளிட்ட 4 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!