ஈரோட்டில் 5 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை

ஈரோட்டில் 5 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை
X
ஈரோட்டில் அடுத்தடுத்த ஐந்து ஜவுளி கடையில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை., சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அடுத்துள்ள திருவேங்கடம்சாமி வீதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை ஜவுளி விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திருவேங்கடசாமி வீதியில் உள்ள லட்சுமி ஜவுளி கடை உள்ளிட்ட 5கடைகளில் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் இரும்பு கம்பி மூலம் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைத்திருந்த சுமார் 1லட்ச ரூபாய் மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்து சென்றுள்ளனர்.மேலும் சில கடைகளில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த செக்புக்கை தீ வைத்து எரித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஈரோடு நகர காவல்துறையினர் கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் கைப்பற்றிய காவல்துறையினர் அதில் பதிவாகியுள்ள கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி