சசிகலா வருகையால் அரசியலில் மாற்றம் ?அண்ணாமலை பதில்

சசிகலா வருகையால் அரசியலில் மாற்றம் ?அண்ணாமலை பதில்
X

சசிகலா தமிழகம் வருகையால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு ஈரோட்டில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை பதிலளித்தார்.

பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- கொரோனாவுக்கு ரூ 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலையை பொறுத்தவரை இதில் 4 பேர் இந்தியர்கள் இல்லை.இலங்கையைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் தமிழர்கள். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இது சாதாரண வழக்கு அல்ல. டெல்லியில் விவசாயிகள் என்ற பெயரில் ஒரு சிலர் ஊடுருவி போலீசாரை தாக்கி உள்ளனர்.

சசிகலா தமிழகம் வருகையால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு, நாங்கள் அதிமுக வுடன் கூட்டணியில் உள்ளோம். அவர் சிறை தண்டனை முடிந்து வருகிறார். குழப்பங்களை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைக்கக் கூடாது. விசைத்தறியாளர்கள் நெசவாளர்கள் சில பிரச்சனைகள் குறித்து கூறி உள்ளார்கள். அவர்களை இந்த மாத இறுதிக்குள் டெல்லிக்கு அழைத்துச் சென்று அமைச்சர்களிடம் பேச வைத்து பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story