தொடரும் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

தொடரும் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்
X
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி, ஈரோட்டில் 4வது நாளாக தொடரும் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்.

ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் , 2030 ஆண்டிற்குள் மத்திய அரசு ஒரே தேசம் , ஓரே மருத்துவ முறையை கொண்டு வர உள்ளதை கண்டித்தும் ஈரோட்டில் மருத்துவர்கள் 4வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுதாகர் , மத்திய அரசின் திட்டங்களால் மக்களின் ஆரோக்கியத்தோடும் உயிரோடு விளையாடுவது போன்றது, எனவே திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனிடையே ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!