அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்

அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்
X
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாளையொட்டி பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 52-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது படத்திற்கு சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாளையொட்டி பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட அவைத்தலைவர் பிசி ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணைமேயர் கே சி பழனிச்சாமி, பகுதி செயலாளர் மனோகரன், ஜெகதீஸ்வரி, தங்கமுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார்,மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் நந்தகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஈரோடு செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாவட்ட செயலாளர் சோலா ஆசைத்தம்பி தலைமையில் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
ai solutions for small business