மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

மருத்துவர்கள் தொடர்  உண்ணாவிரதப் போராட்டம்
X
ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், 2030 ஆண்டிற்குள் மத்திய அரசு ஒரே தேசம், ஓரே மருத்துவ முறையை கொண்டு வர உள்ளதை கண்டித்தும் ஈரோட்டில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், 2030 ஆண்டிற்குள் மத்திய அரசு ஒரே தேசம், ஓரே மருத்துவ முறையை கொண்டு வர உள்ளதை கண்டித்தும் ஈரோட்டில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் சி என் ராஜா தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் மக்களின் ஆரோக்கியத்தோடும் உயிரோடு விளையாடுவது போன்றது என்றும் , எனவே திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.தமிழகம் முழுவதும் 14 நாட்கள் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மருத்துவ சேவை பாதிக்கப்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future