அரசுப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு
கருங்கல்பாளையம் மாநகராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கூடுதல் வகுப்பறைக்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. எம்எல்ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கூடுதல் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் அதே பள்ளியில் படிக்கும் 166 மாணவிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏக்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணைமேயர் பழனிசாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், தங்கமுத்து, முருகசேகர், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, இணைச்செயலாளர் நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu