ஈரோட்டில் குடியரசு தின விழா

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்திய நாட்டின் 72-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு வஉசி. மைதானத்தில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.அதன் பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர், தீயணைப்புதுறையினர், முன்னாள் படைவீரர் நலத்துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 197 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி., தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!