ஈரோடு: 4 -வது நாளாக கொரானா தடுப்பூசி

ஈரோடு:  4 -வது நாளாக கொரானா தடுப்பூசி
X
ஈரோடு மாவட்டத்தில் 4-வது நாளாக தடுப்பூசி போடும் பணி நடந்தது. மாவட்டம் முழுவதும் 216 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அனைவரும் நலமாக உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கான கோவிஷீல்டு முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை உள்பட 5 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 16 ஆம் தேதி முதல் இந்த 5 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் மூன்று நாட்களில் நூற்றுக்கு கீழ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. அரசு டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தனியார் டாக்டர்கள் ஆகியோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 4-வது நாளாக தடுப்பூசி போடும் பணி நடந்தது. மாவட்டம் முழுவதும் 216 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அனைவரும் நலமாக உள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணியாளர்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பவானி மற்றும் கோபி அரசு மருத்துவமனை, சிறுவலுார் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகிய ஐந்து இடங்களில், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது டாக்டர்கள், நர்ஸ், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என, 13,800 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான மருந்து, 13,800 டோஸ் மற்றும் கூடுதலாக, 20 சதவீத மருந்தும் வந்துள்ளது. இவை, 86 மையங்களில் குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தற்போது முதற்கட்டமாக அரசு , தனியார் டாக்டர்கள், செவிலியர்கள் சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக, அரசின் பிற துறைகளில் பணி புரியும் முன் களப்பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு குறைவான உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், நீரழிவு நோய் போன்று கூட்டு நோய் உள்ளவர்களுக்கும் அடுத்த கட்டமாக பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்படும் நபரின் மொபைல் எண்ணின், 'கோவின்' செயலியில், அவருக்கு போடப்பட்ட தடுப்பூசி விபரம், க்யூ.ஆர்., கோடு மூலமும் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!