ஈரோடு ரயில் நிலையத்தில் வளர்ச்சி குறித்து ஆய்வு

ஈரோடு  ரயில் நிலையத்தில் வளர்ச்சி  குறித்து ஆய்வு
X

ஈரோடு ரயில் நிலையத்திற்கு இன்று சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளர் ஸ்ரீநிவாஸ் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஈரோடு ரயில் நிலையத்தில் டிரைவர்கள் தங்கும் அறையை பார்வையிட்டார். பின்னர் எலக்ட்ரிக்கல் என்ஜின் பணிமனைக்கு சென்றும் பார்வையிட்டார்.

பின்னர் ஸ்ரீநிவாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ஈரோடு ரயில் நிலையத்தில் எக்ஸ் லேட்டர் பணிகள் இன்னும் ஆறு மாதத்தில் நிறைவு பெறும். ஈரோடு ரயில் நிலையம் முன்பு ரயில் என்ஜின் முன்மாதிரி மாடல் வைக்கப்படும். ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறை, டிரைவர்கள் தங்கும் அறை கூடுதல் வசதிகள் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் தேவையான சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளன என்று அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!