ஈரோட்டில் தயார் நிலையில் பள்ளிகள்-விடுதிகள்

ஈரோட்டில் தயார் நிலையில் பள்ளிகள்-விடுதிகள்
X
ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வகுப்பு நுழைவாயில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் உட்பட பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டி முறைகள் பின்பற்றப்படுகின்றன.

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் ஆன் லைன் வகுப்புகள் மூலமாகவும், அரசு தொலைக்காட்சிகள் மூலமாகவும் மாணவ மாணவிகள் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். தற்போது கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் மீண்டும் பள்ளிகளை திறக்கலாமா? என்று பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. முதலில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க வேண்டாம் என்று கூறியதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பொது தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது கட்டமாக எஸ்.எஸ்.எல்.சி, மற்றும் பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாமா? என்று மீண்டும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் 95 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கலாம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி பிளஸ்- 2 மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வகுப்பு நுழைவாயில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் உட்பட பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டி முறைகள் பின்பற்றப்படுகின்றன.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.எஸ்.எல்.சி பிளஸ்-2 வகுப்புகளை திறக்க அந்தந்த மாவட்ட பள்ளிக் கல்வித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 403 பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 29 ஆயிரத்து 642 மாணவ மாணவிகளும், 12-ம் வகுப்பில் 24 ஆயிரத்து 710 மாண -மாணவிகள் என மொத்தம் 54 ஆயிரத்து 352 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் பள்ளி திறப்பை ஒட்டி வகுப்புகளை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வகுப்புகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கோப்புகளில் உள்ள பழுதடைந்துள்ள பிளாக் போர்டு சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்- 2 மாணவ -மாணவிகளுக்காக 403 பள்ளிகள் திறக்கப் படுகிறது.பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்துள்ளது.அதன்படிதான் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. நாளை கோப்புகளுக்கு வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோர் ஒப்புதல் கடிதத்தை கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்புகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. வகுப்புகளில் நுழைவாயில் சனிடைசர் வைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் உடல் வெப்ப நிலையை அறிந்துகொள்ள தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுபோல் வெளி மாவட்டங்களில் இருந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்காக விடுதியும் திறக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. வெளிமாவட்ட நிறைந்து வரும் மாணவர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கொண்டுவராத மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். உடல் வெப்ப நிலையில் மாற்றம் இருந்தால் அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பணியாளர்கள் மூலம் கணிக்கப்பட்டு தேவையான சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் நாள் என்பதால் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவார்கள் என்று கூறமுடியாது நாள் செல்ல செல்ல சகஜ நிலைமை திரும்பியவுடன் மாணவர்கள் அதிக அளவு பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!