ஈரோட்டில் 2 நாட்களில் 178 கொரோனா தடுப்பூசி

ஈரோட்டில் 2  நாட்களில் 178 கொரோனா தடுப்பூசி
X
ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களில் 178 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பவானி மற்றும் கோபி அரசு மருத்துவமனை, சிறுவலுார் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகிய ஐந்து இடங்களில், தடுப்பூசி போடப்படுகிறது. டாக்டர்கள், நர்ஸ், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் உட்பட 13,800 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐந்து மையங்களிலும் நாளொன்றுக்கு 100 பேர் வீதம் 500 பேருக்கு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளில் 99 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணியாளர்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பவானி மற்றும் கோபி அரசு மருத்துவமனை, சிறுவலுார் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகிய ஐந்து இடங்களில், தடுப்பூசி போடப்படுகிறது. டாக்டர்கள், நர்ஸ், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என, 13,800 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான மருந்து, 13,800 டோஸ் மற்றும் கூடுதலாக, 20 சதவீத மருந்தும் வந்துள்ளது. இவை, 86 மையங்களில் குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, அரசின் பிற துறைகளில் பணி புரியும் முன் களப்பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு குறைவான உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், நீரழிவு நோய் போன்று கூட்டு நோய் உள்ளவர்களுக்கும், மூன்றாம் கட்டமாக பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி போடப்படும் நபரின் மொபைல் எண்ணின், 'கோவிட்' செயலியில், அவருக்கு போடப்பட்ட தடுப்பூசி விபரம், க்யூ.ஆர்., கோடு மூலமும் அனுப்பி வைக்கப்படும். முதல் நாளில் 5 மையங்களில் 99 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் அரசு டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள் ,

பணியாளர்களுக்கு போடப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நேற்று மாவட்டம் முழுவதும் 5 மையங்களிலும் 79 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 178 முன் நலப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். இன்னும் ஒரு வாரம் கழித்து நாளொன்றுக்கு 100 பேர் வீதம் தடுப்பூசி போடப்படும். இன்று மூன்றாவது நாளாக தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!