ஈரோடு மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்

ஈரோடு மாரியம்மன் கோவில்  கும்பாபிசேகம்
X
பிரசித்தி பெற்ற ஈரோடு மாரியம்மன் கோவில்களில் நாளை கும்பாபிசேகம் நடைபெற உள்ளது.

ஈரோட்டில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கரைவாய்க்கால் மாரியம்மன் என மூன்று கோயில்கள் உள்ளன. ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் இந்த மூன்று கோயில்களிலும் ஒன்றாக கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு விழாவின் இறுதியில் மஞ்சல் நீராட்டு விழாக்கள் என வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக வருவார்கள். இந்நிலையில் ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலை 50லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போத அந்த பணிகள் நிறைவுற்றது. பாரியூர் காளியம்மன் கோவிலை போல, காளிங்கராயன் வாய்க்காலில் நீராடி பின் குண்டம் இறங்கும் வகையில் கோவில் நிலை மாற்றப்பட்டது. குண்டம் இறங்கும் பக்தர்களை காணும் வகையில் மூலவர் கருவறை அமைக்கப்பட்டது. இதே போல் பொன்வீதியில் உள்ள சின்னமாரியம்மன், புனரமைப்பு பணிகள் முடிந்ததையொட்டி, நாளை மாவட்ட நிர்வாகத்தில் அனுமதியுடன் காலை 10 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், 10:35 மணிக்கு மேல் சின்னமாரியம்மன் கோவிலிலும் கும்பாபிசேகம் நடக்கிறது.

நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இன்று இரண்டாம் காலம், மூன்றாம் யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கலசம் நிறுவுதல், அஷ்ட பந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. கும்பாபிசேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடை பிடிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!