ஈரோட்டில் கொரோனா தடுப்பு ஊசி முகாம்
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொணடு தடுப்பூசி போடும் பணி துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்திற்கு 13800 கொரோனா தடுப்பூசிகள் வரப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவத்துறையில் முன்கள பணியாற்றியவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படுகின்றது. இம்முகமானது ஈரோடு, கோபி,பவானி ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகள், பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தலா 100 பேர் என மொத்தம் 500 நபர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகின்றது. தடுப்பூசி போடப்படும் அனைவரும் அரைமணிநேரம் மருத்துவரின் கண்காணிப்பில் வைத்து கண்காணிக்கப்பட்டு பின்னரே அனுப்பப்படுகின்றனர். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு செலுத்தப்பட்ட ஊசியின் விவரங்கள் உட்பட அனைத்தும் விவரங்களும் இடம் பெற்றுள்ள QR கோடு வழங்கப்படுகின்றது. இந்த QR கோர்டை பயன்படுத்தி அவர்களுக்கு உடலில் சிறு மாற்றங்கள் ஏற்படுமெனில் இந்தியாவில் எந்த இடத்திலும் மருத்துவமனையில் அணுகி ஸ்கேன் செய்தால் அவருக்கு வழங்கப்பட்ட ஊசியின் முழு விவரம் தெரியவரும் என்றும் இவர்களுக்கு இரண்டாவது சுற்று அடுத்த 28 நாட்களுக்கு பின்னர் வழங்கப்படும் எனறும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu